இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா

இந்தியாவில், 16 இத்தாலியர்கள் உள்பட 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்..
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா
x
இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஆலோசனையை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.இத்தாலியர்கள் 16 பேர், அவர்களை அழைத்து சென்ற இந்திய ஓட்டுநர் ஒருவர், 

* ஆக்ராவை சேர்ந்த 6 பேர், டெல்லியை சேர்ந்த ஒருவர், தெலங்கானாவில் ஒருவர், கேரளாவை சேர்ந்த மூவர் என  28 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.இதில் கேரளாவை சேர்ந்த மூவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, நலமுடன் உள்ளனர்..டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களான, ஆக்ராவில் வசிக்கும் 6 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. 


* இந்நிலையில், அனைத்து விமான நிலையங்களிலும், மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகப்படும் நபர்களுக்கு உயரிய, தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்