"இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள்" - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

சிஏஏ சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள் - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
x
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புவதாக தெரிவித்தார். மேலும், இந்த சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்கள் யாரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். ஆனால், எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை கூறி, மக்களை தூண்டி விட்டு கலவரம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், சிஏஏ சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்காது எனவும் கூறினார். சிஏஏ சட்டத்தில், எந்த சட்டப்பிரிவு, குடியுரிமையை பறிப்பது பற்றி பேசுகிறது என எதிர்க்கட்சியினரிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் எனவும் அமித் ஷா கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்