காரைக்கால் - யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை... "3 மாதங்களில் துவங்கும், ரூ.7000 கட்டணம்"

காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 3 மாதங்களில், பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
காரைக்கால் - யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை... 3 மாதங்களில் துவங்கும், ரூ.7000 கட்டணம்
x
காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 3 மாதங்களில், பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். புதுச்சேரி தலைமை செயலகத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 3 மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என்று கூறிய அவர், இதற்கு 7 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில், மாநில அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் இந்திய, இலங்கை துறைமுக அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்