சிறையில் பெண் குற்றவாளி ஜோலி தற்கொலை முயற்சி - கை நரம்பை துண்டிக்க முயன்றதாக தகவல்

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொலை செய்த பெண் ஜோலி சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறையில் பெண் குற்றவாளி ஜோலி தற்கொலை முயற்சி - கை நரம்பை துண்டிக்க முயன்றதாக தகவல்
x
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை உணவில் விஷம் கொடுத்து ஜோலி, கொலை செய்தார். இந்த குற்றத்திற்கு அவர் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனது கை நரம்பை துண்டிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இவ்வாறு செய்து தற்கொலைக்கு முயன்ற அவரை சிறை துறை போலீசார் மீட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மன அழுத்தம் காரணமாக இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் காயமடைந்த கையில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும்  தெரிவித்துள்ள மருத்துவர்கள், இச்சம்பவத்தால் அவரது உயிருக்கு  பாதிப்பு ஏற்படும் அளவுக்கு பிரச்னை இல்லை என கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்