கொரோனா வைரஸ் அச்சம் - கேரள சுற்றுலாத்துறைக்கு வருவாய் இழப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கேரள சட்டப் பேரவையில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கேரள சட்டப் பேரவையில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள தங்கும் விடுதிகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பின்னர், முன்பதிவுகள் ரத்து செய்யப்ட்டு வருவதாக தெரிவித்தார். இந்த பிரச்சனையால் கேரள சுற்றுலாத் துறைக்கு மீண்டும் ஒரு இழப்பு உருவாகி வருவதாகவும் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story

