71-வது குடியரசு தின விழா : டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஒத்திகை

71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பிற்கான கலைநிகழ்ச்சி ஒத்திகை டெல்லியில் களை கட்டியுள்ளது.
71-வது குடியரசு தின விழா : டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஒத்திகை
x
தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில், பல்வேறு மாநிலங்களின் கலை கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ்நாடு, தெலுங்கானா உத்தரப் பிரதேசம் அஸ்ஸாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் ராணுவ அமைச்சகம் உள்பட மொத்தம் 22 அமைப்புகளின் நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. இதில் பங்கேற்கும் கலைஞர்கள் டெல்லியில் முகாமிட்டு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் பாரம்பரியமிக்க கிராமிய கரகாட்டம் தப்பாட்ட கலைகள் இடம் பெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்