"சபரிமலை வழக்கு - 3 வாரம் அவகாசம்"
பதிவு : ஜனவரி 13, 2020, 01:54 PM
சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.
சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே முன்பு விசாரணைக்கு வந்தது.

 அப்போது, சபரிமலை வழக்கில், சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை எனவும்,  மத, வழிபாட்டு உரிமைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குறிப்புகளை விசாரிக்க உள்ளோம் எனவும் பாப்டே தெரிவித்தார்.

மேலும், பெண்கள் கோவிலுக்குள், மசூதிக்குள், பார்சிக்களின் வழிபாட்டு தளங்களில் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா  என்பதை, தாம் கேட்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

அப்போது, இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் மனுதாக்கல் செய்யவும் வாதங்களை முன்வைக்கவும், வழக்கறிஞர்கள் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, 
எந்த வழக்கறிஞருக்கும் கூடுதல் கால அவகாசம் கொடுக்க முடியாது எனவும் தேவையில்லாத வாதங்களையும் கேட்க முடியாது என்றும் கூறினார்.

வாதாடவுள்ள வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே கலந்து பேசி யார், யார் எவ்வளவு நேரம், எதை குறித்த வாதங்களை முன் வைக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல எனவும் அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க உள்ளதாகவும் பாப்டே அப்போது தெரிவித்தார்.

சபரிமலை மறுஆய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு என்ன என்ன கேள்விகளை எழுப்பியதோ அது குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்படும் எனவும்  இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக வரும் 17 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா - 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த உலகெங்கும் 40 நாடுகளுக்கு மேல் முழு ஊரடங்கு அல்லது பகுதி சார்ந்த ஊரடங்கு அமலில் உள்ளது...

144 views

ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

12 views

கொரோனா விழிப்புணர்வு : எஸ்.பி.பி பாடலுக்கு நடனமாடும் மாணவி

கொரோனா வைரஸ் குறித்து, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலுக்கு, சிதம்பரத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

35 views

தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்

சென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

8 views

விழுப்புரத்தில் திமுக சார்பில் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் வருவாய் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

35 views

நியூயார்க்கில் மட்டும் 3500 பேர் கொரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.