புதுச்சேரி : அரசுப் பள்ளியில் காலதாமதமான மதிய உணவு - விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவு

புதுச்சேரியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மாலை 3 மணிக்கு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி : அரசுப் பள்ளியில் காலதாமதமான மதிய உணவு - விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவு
x
புதுச்சேரியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மாலை 3 மணிக்கு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியை அடுத்த, குமாரபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், மதியம் 12 மணிக்கு அளிக்க வேண்டிய மதிய உணவு, வீட்டிற்கு செல்லும் நேரத்திற்கு முன்பாக அளிக்கப்பட்டதை மாணவரின் பெற்றோர் ஒருவர் வீடியோ பதிவு  செய்துள்ளார். மாணவர்கள் உணவுக்காக காத்திருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.  இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்