ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி : பக்தர்களுக்கு வழங்க 9 லட்சம் லட்டுகள் தயார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது.
ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி : பக்தர்களுக்கு வழங்க 9 லட்சம் லட்டுகள் தயார்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது.  நாளை காலை 2 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளதால், முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 5 மணிக்கு மேல் சர்வ தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை காலை தரிசனத்திற்காக, இன்று காலை முதலே பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு கழிவறை வசதி, உணவு, குடிநீர் ஆகியவை 172 இடங்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்