"போராடும் மக்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதா?" - மத்திய அரசுக்கு, சோனியா காந்தி கடும் கண்டனம்

ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
போராடும் மக்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதா? - மத்திய அரசுக்கு, சோனியா காந்தி கடும் கண்டனம்
x
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய இரண்டும் ஏழை எளிய மக்களை துன்புறுத்தக் கூடியவை என அவர் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்டதை போல மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு எழும் ஐயங்கள் நியாயமானவை என கூறியுள்ள சோனியா காந்தி,  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக  போராடும் மக்கள் மீதான வன்முறைகளை அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சோனியா காந்தி, இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும் என்றாா்.

Next Story

மேலும் செய்திகள்