"எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது"- ரஜினி

"நாட்டின் நலன் கருதி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்"
எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது- ரஜினி
x
எந்த ஒரு பிரச்சினைக்கும், வன்முறை ஓர் வழி ஆகிவிடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாட்டின் நலன், மற்றும் பாதுகாப்பு கருதி இந்திய மக்கள், ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நடக்கும் வன்முறைகள் மனதுக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்