"452 மரங்களை வெட்டலாம்"- வடக்கு ரயில்வே-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி- மதுரா இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்காக, 452 மரங்களை வெட்ட வடக்கு ரயில்வே-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
452 மரங்களை வெட்டலாம்- வடக்கு ரயில்வே-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி
x
டெல்லி - மதுரா இடையே, ரயில்களின் நெரிசல் அதிகமானதால் நான்காவது வழித் தடத்தை உருவாக்க வடக்கு ரயில்வே திட்டமிட்டது. இந்த பணிக்காக, தாஜ் சரிவகம் மண்டலத்தில் 452 மரங்களை வெட்ட அனுமதி கோரி, வடக்கு ரயில்வே உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஏற்கனவே, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குறைந்த மரங்களை வெட்டும் வகையில், மாற்று வழி இல்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வடக்கு ரயில்வே நிர்வாக தரப்பு வழக்கறிஞர், மாற்று வழி இல்லை என விளக்கம் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், 452 மரங்களை வெட்ட வடக்கு ரயில்வே நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்