பீகார் மாநிலம் கயாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட பாதுகாப்புத்துறை முடிவு

பீகார் மாநிலம் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட பாதுகாப்புத்துறை முடிவு
x
கார்கில் போரைத் தொடர்ந்து ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க அப்போதைய அரசு முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் கயாவில் அதிகாரிகள் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டது. 750 பேருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் தற்போது 250 பேர் வரை மட்டுமே பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் டேராடூனில் உள்ள பயிற்சி மையத்தில் ஆயிரத்து 650 பேர் வரை பயிற்சி பெற முடியும் என்ற நிலையில், அங்கு 300 பேர் தான் பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது ராணுவத்தில் பணியாற்ற இளைஞர்கள் இடையே ஆர்வம் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த பயிற்சியை பெறும் 50 சதவீதம் பேர் பணியில் சேருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கயா பயிற்சி மையத்தை மூடிவிட்டு, அங்குள்ளவர்களுக்கு டேராடூனில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்