சபரிமலையில் காங்கிரஸ் குழு ஆய்வு

சபரிமலையில் அடிப்படை வசதிகள் குறித்து காங்கிரஸ் குழு ஆய்வு மேற்கொண்டது.
சபரிமலையில் காங்கிரஸ் குழு ஆய்வு
x
கடந்த ஆண்டு பெய்த கடும் மழையில் பம்பையில் கடும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்,  திருவாச்சூர் ராதாகிருஷ்ணன் சிவக்குமார், உள்ளிட்டோர் நிலக்கல்லில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தை பார்வையிட்டனர். பக்தர்கள் தங்கும் இடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். இதேபோல்  பம்பை நதியை பார்வையிட்ட குழுவினர்,  கன்னிமூல கணபதி கோயில் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் குழுவினர், அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்