சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு : "தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு முடிவு"

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை கேரள அரசு நடைமுறைப்படுத்தும் என முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு : தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு முடிவு
x
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயன், செய்தியாளர்களை சந்தித்தார். ஏற்கனவே, அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கும் தீர்ப்பு உள்ள நிலையில், தற்போது, உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதிக்க மறுத்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலமாக, முந்தைய தீர்ப்பே தற்போதும் நடைமுறையில் உள்ளதால், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நிலைப்பாட்டில் கேரள அரசு உறுதியாக உள்ளதாகவும் பினரயி விஜயன் தெரிவித்தார். மேலும், தற்போதைய தீர்ப்பின் முழுவிபரம் இன்னமும் கேரள அரசுக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்