டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு

டெல்லியின் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், காற்று மாசுவின் தரம் மீண்டும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு
x
வாகன பெருக்கத்தால் அனைத்து நகரங்களிலும் காற்று மாசு  அதிகரித்து வரும் நிலையில்,  தலைநகர் டெல்லியின் காற்று மாசு அபாய கட்டத்தில் உள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள், பயிர்க் கழிவுகளை தீ வைத்து எரிப்பதே காற்று மாசு அதிகரிக்க காரணம்.

இதைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், உச்சநீதிமன்றமும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், விவசாயிகள் இந்த ஆண்டும் பயிர் கழிவுகளை எரிக்க தொடங்கியதால் காற்று மாசு மிக மோசமான கட்டத்தை எட்டியது.

இதையடுத்து டெல்லியில் கடந்த வாரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், சனி, ஞாயிறு விடுமுறை  நாட்களில் காற்றின் தரம் சிறிதளவு முன்னேற்றம் கண்டது. இந்த நிலையில், மீண்டும்  450 புள்ளிகளுடன் கடின நிலை என்கிற அளவை எட்டியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. டெல்லியில் கடைபிடிக்கப்பட்டு வரும் வாகன கட்டுப்பாடு திட்டத்தினை, குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு  இரண்டு நாட்கள் தளர்த்தியதால் காற்று மாசு கிடுகிடுவென உயர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பயிர்க் கழிவுகள் எரிப்பதை, அந்த மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெல்லிவாசிகள் சுவாச கோளாறுகளால் அவதிபடும் நிலையில், விவசாயிகள் மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்