பெங்களூருவில் பேய் வேடமிட்டு அச்சுறுத்திய 7 இளைஞர்கள்

பேய் வேடமிட்டு அச்சுறுத்திய இளைஞர்கள் - 7 இளைஞர்களை கைது செய்தது போலீஸ்
பெங்களூருவில் பேய் வேடமிட்டு அச்சுறுத்திய 7 இளைஞர்கள்
x
பெங்களூருவில் பேய் வேடமிட்டு இரவில் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்திய 7 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் அதிகாலை 2.30 மணியளவில் யஸ்வந்பூர் என்ற பகுதியில் காவல்துறை அதிகாரிகள் இருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது 7 இளைஞர்கள் பேய் வேடமிட்டு சாலையில் உலாவி கொண்டிருந்ததை கண்டனர். காவல்துறை அதிகாரிகளை கண்ட இளைஞர்கள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓட முயற்சித்த போது அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் சமூக வலைத்தளங்களில் கேளிக்கை வீடியோ பதிவிட இந்த செயலில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மக்களை அச்சுறுத்தியதாக வழக்குப் பதிவு செய்து 7 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்