பாஜக - சிவசேனா இடையே சமரசம் ஏற்படுமா?

மகாராஷ்டிராவில், தேவிந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி காலம், நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அங்கு யார் புதிய ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக - சிவசேனா இடையே சமரசம் ஏற்படுமா?
x
மஹாராஷ்டிராவில் தற்போதையபேரவையின் பதவிக்காலம், நாளை 9ம் தேதியுடன் முடிவடைவடைகிறது. இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களுடன் வெற்றி பெற்ற போதிலும் அதிகார பங்கீடு தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. சிவசேனாவை தவிர்த்துப் பார்த்தால், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 40 பேரின் ஆதரவு தேவை. எனவே,  அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆலோசனை நடத்தினார்.  இதையடுத்து, அதிக இடங்களை பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, 25 ஆண்டுகளாக நீடிக்கும் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை என்றும், பாஜக தனது உறுதியை காப்பாற்ற வேண்டும்  என்றும் சிவசேனா  தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். முடிவு பாஜக கையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிவசேனா எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாட்கள் அங்கேயே இருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்