ரூ.500 கோடி கணக்கில் வராத சொத்துக்கள் சிக்கியது

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் 500 கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
ரூ.500 கோடி கணக்கில் வராத சொத்துக்கள் சிக்கியது
x
* கடந்த 16 ம் தேதி கல்கி ஆசிரமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு , ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

* முதல் கட்ட சோதனையின் போது 2014-15 நிதியாண்டில் வாங்கப்பட்ட 400 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. 

* இதை தொடர்ந்து மூன்று நாள் நடைபெற்ற வருமான வரி சோதனையில், கட்டுக்கட்டாக 44 கோடி ரூபாய் பணம்,மூட்டை மூட்டைகளாக18 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த‌து கண்டுபிடிக்கப்பட்டது. 

* இதேபோல 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள் , 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 கேரட் வைர நகைகளும் குவியல் குவியலாக சிக்கியுள்ளன. 

* இவை தவிர 500 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத சொத்துக்களும் அது தொடர்பான ஆவணங்களும் வருமானவரித்துறையிடம் சிக்கியுள்ளது. இந்த ஆவணங்களையும்,  ஆசிரம‌ம் தொடர்பான கணக்குகளையும்  ஆய்வு செய்து வரும் வருமான வரித்துறையினர்,  இதில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். மொத்தமாக வரி ஏய்ப்பு செய்த தொகை எவ்வளவு உள்ளிட்ட விவரங்கள் இந்த ஆய்வு மற்றும் விசாரணையின் முடிவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  



Next Story

மேலும் செய்திகள்