அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்ப​ட்டு உள்ள நிலையில் அவர்கள் நிச்சயமற்ற பதட்டமான நிலையில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
x
அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்ப​ட்டு உள்ள நிலையில், அவர்கள் நிச்சயமற்ற, பதட்டமான நிலையில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  மறுக்கப்பட்டு உள்ள குடிமை மற்றும் மனித உரிமைகள் குறித்து, மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி வரும் இந்நேரத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் வங்கதேச அரசுக்கு தேசிய குடியுரிமை பதிவேட்டால் பிரச்சனை வராது என அரசு உறுதி அளித்துள்ள நிலையில், அந்த 19 லட்சம் பேர் இன்னும் எத்தனை நாட்களுக்கு, துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குடியுரிமை மறுக்கப்பட்ட 19 லட்சம் பேரை அரசு எவ்வாறு கையாளப்போகிறது எனவும் சிதம்பரம் தனது பதிவில் வினவியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்