திருப்பதி கோவிலில் வெண்பட்டு குடைகள் ஒப்படைப்பு : இந்து தர்மார்த்த சமிதி நிர்வாகிகள் வழங்கினர்

சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட 11 வெண்பட்டு குடைகள், திருப்பதி கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருப்பதி கோவிலில் வெண்பட்டு குடைகள் ஒப்படைப்பு : இந்து தர்மார்த்த சமிதி நிர்வாகிகள் வழங்கினர்
x
இந்து தர்மார்த்த சமிதி அமைப்பு சார்பில் சென்னையில், கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம், இன்று மாலை திருப்பதி திருமலையை சென்றடைந்தது. அங்கிருந்து வெண்பட்டு குடைகளுடன், மங்கள பொருட்களும், மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஏழுமலையான் கோயில் முன்பு, கோயில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2 வெண்பட்டு குடைகள் அளிக்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் கோபால்ஜி, ஊர்வலத்தின்போது சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருக்குடைகளை வழிபட்டதாக தெரிவித்தார்.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ஆவது நாள்... ஊஞ்சல் சேவை - பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் ஊஞ்சல் சேவை வைபவம் விமர்சையாக நடைபெற்றது. கோவில் அருகே உள்ள ஊஞ்சல் சேவை மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசுவாமி ராஜ அலங்காரத்தில் செங்கோலுடன் காட்சி அளித்தார். இந்த ஊஞ்சல் சேவை வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்