டிச.5-ல் கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல்

ஒத்திவைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் டிசம்பர் 5 ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிச.5-ல் கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல்
x
ஒத்திவைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் டிசம்பர் 5 ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில், 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், 15 தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பதாக தலைமை தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.இந்த சூழலில், கர்நாடகாவில், இந்த 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் டிசம்பர் 5 ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9 ம் தேதியும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்