"பயணிகளின் கோரிக்கையை ஏற்றது இண்டிகோ நிறுவனம்"

விமான சேவையை மாலை நேரத்தில் மாற்றி இயக்க முடிவு
பயணிகளின் கோரிக்கையை ஏற்றது இண்டிகோ நிறுவனம்
x
திருச்சியில் இருந்து பெங்களூரு வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை மாலை நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  திருச்சி - பெங்களூரு இண்டிகோ விமான சேவை, ஓடுதள பராமரிப்பு உள்ளிட்ட சில தொழில்நுட்ப காரணங்களுக்காக அக்டாபர் 27 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பயணிகள் தொடர் கோரிக்கையை ஏற்று, சேவையை மாலை நேரத்தில் மாற்றியமைக்க இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து திருச்சிக்கும், 7.30 க்கு திருச்சியில் இருந்து பெங்களூருவிற்கும் விமானம் இயக்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்