உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்
உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்
x
உச்ச நீதிமன்றத்துக்கு தமிழகத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன் உட்பட நான்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக, மத்திய அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  புதிய நீதிபதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான தமிழகத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் விரைவில் பதவியேற்க உள்ளனர். புதிய நீதிபதிகள் நியமனத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்