பலகட்சி ஜனநாயக முறை தோல்வியா? என மக்களுக்கு சந்தேகம் - அமித்ஷா

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பலகட்சி ஜனநாயக முறையில் மக்கள் அவநம்பிக்கையுடன் இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பலகட்சி ஜனநாயக முறை தோல்வியா? என மக்களுக்கு சந்தேகம் - அமித்ஷா
x
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பலகட்சி ஜனநாயக முறையில் மக்கள் அவநம்பிக்கையுடன் இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய முடிவெடுப்பதில் காங்கிரஸ் ஆட்சி தயக்கம் காட்டியதாக குற்றம்சாட்டினார்.  பிரதமர் மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளில் 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்