நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி துறை குறித்து பல்வேறு விளக்கங்களை எடுத்துரைத்தார். பண வீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதால், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உற்பத்தி துறை மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும், வரும் 19 ஆம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார். வாராக்கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், வங்கிகளுக்கான வரவு சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான காப்பீடு வரி அதிகரிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்