விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது - இஸ்ரோ

நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
x
சந்திரயான் -2 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. நிலவில் தரையிறங்குவதற்கு 2 புள்ளி 1 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்போது, தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், விக்ரம் லேண்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் . ஆனாலும், விக்ரம் லேண்டரிலிருந்து எந்த தகவலும் இல்லை என்றும், அதனை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சிவன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்