தலைக்காவிரியில் இருந்து 3, 500 கி.மீ. விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் ஜக்கி வாசுதேவ்

காவேரி கூக்குரல் இயக்கத்தில் அரசு மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான 3 ஆயிரத்து 500 கி.மீ மோட்டர் சைக்கிள் பயணத்தை கொட்டும் மழையில் தலைக்காவேரியில் இருந்து சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கினார்.
தலைக்காவிரியில் இருந்து 3, 500 கி.மீ. விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் ஜக்கி வாசுதேவ்
x
'காவேரி கூக்குரல்' இயக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடங்கப்பட்டுள்ளது. இது ஈஷா அவுட்ரீச் மேற்கொள்ளும் 2-வது நதி மீட்பு களப் பணி. இந்த இயக்கத்தின் சார்பில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காவேரி வடிநிலப் பகுதி விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் காவிரி உதயமாகும் தலைக்காவிரியில் இருந்து கொட்டும் மழையில் தனது இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை சத்குரு  ஜக்கி வாசுதேவ் தொடங்கினார்.மைசூரு, மாண்டியா, பெங்களூரு, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, புதுச்சேரி வழியாக செப்.15-ம் தேதி சென்னை வந்தடைகிறார்.இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சவால் மிகுந்த இந்த பயணத்தில் பயணிக்க பலரும் உறுதியுடன் இருப்பது பாராட்டுக்குரியது என்றும், இந்த மழையை மண்ணுக்குள் அனுப்ப மரங்கள் அவசியம் என்றும்  கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்