வெற்றிகரமாக பிரிந்த 'விக்ரம்' லேண்டர், விரைவில் நிலவை நெருங்கும் என தகவல்

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 செயற்கை கோளில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவை ​நெருங்கியுள்ளது.
வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர், விரைவில் நிலவை நெருங்கும் என தகவல்
x
நிலவில் நீர் இருப்பது உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய சந்திரயான் 2 செயற்கைகோள் அங்கு ஏவப்பட்டது. நிலவின் வெளி வட்டப்பாதையில் சுற்றி வந்த இந்த செயற்கை கோளில் இருந்து, இன்று விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. 119க்கு 127 கிலோ மீட்டர் அளவிலான நிலவின் வட்டப் பாதையில் தற்போது, லேண்டர் உள்ளது. படிப்படியாக நிலவை நெருங்கும் விக்ரம் லேண்டர், விரைவில் நில​வில் இறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அனைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டப்படி ஆரோக்கியத்துடன் உள்ளதாக கூறும் இஸ்ரோ, அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இதனிடையே, லேண்டரின் அடுத்தகட்ட நகர்வு, நாளை காலை எட்டே முக்கால் மணியில் இருந்து  ஒன்பதே முக்கால் மணிக்குள் நடைபெறும் என இஸ்ரோ கூறியுள்ளது. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது மற்றுமொரு மைல்கல் சாதனையாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்