சர்தார் சரோவர் அணையை பார்வையிட மக்களுக்கு பிரதமர் அழைப்பு

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படுகிறது.
சர்தார் சரோவர் அணையை பார்வையிட மக்களுக்கு பிரதமர் அழைப்பு
x
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அருகே 597 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல்  சிலை, ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படுகிறது. இதனை கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிலையில்,  டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த 100 இடங்கள் பட்டியலில்  பட்டேல் சிலையும் இடம் பெற்றுள்ளது. இதனை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அண்மையில் ஒரே நாளில் 34 ஆயிரம் பேர் இந்த சிலையை பார்வையிட்டதையும் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், முதன்முறையாக சர்தார் சரவோர் அணையின் நீர்மட்டம் 134 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளதை பதிவிட்டுள்ள பிரதமர்  நரேந்திர மோடி, இந்த அணையை பார்வையிட மக்கள் அதிக அளவில் வரவேண்டும் என்ற  விருப்பத்தையும் வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்