அருண்ஜெட்லி இறுதி நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவில்லை என தகவல்
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர பங்கேற்க உள்ளதாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது ஏற்கனவே திட்டமிட்டபடி ஜி.7 மாநாட்டில் பங்கேற்றுவிட்டு பிரதமர் நாடு திரும்புவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அருண் ஜெட்லி உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்துவார் என அரசு தெரிவித்துள்ளது. ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், அவரது மனைவி மற்றும் மகனுக்கு தொலைபேசி வழியாக இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story

