காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் - மோடி உரை
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 11:34 PM
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார்..அப்போது, காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் தோன்றிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்றார். ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் துயரத்தில் இருந்தனர் என்ற அவர், அவர்களது துயரை பாஜக அரசு துடைத்துள்ளது என்றார்.நீண்ட நாட்களாக இருந்த அவர்களது துயரம் தற்போது நீங்கியுள்ளது என்றும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.


காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை. அமைதி தவழுகிறது- என்னவெல்லாமோ நடக்கும் என்றார்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

370வது சட்டப்பிரிவு இருந்ததால், காஷ்மீர் மக்களுக்கு என்ன கிடைத்தது என்பது பற்றி யாரும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர்,370, 35A சட்டப்பிரிவு இருந்ததால் தீவிரவாதம், வன்முறை, ஊழல் தான் நடந்தது என்று குறிப்பிட்ட அவர், காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது என்றார். 370-வது  சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது என்றும் மோடி குறிப்பிட்டார்.

370 சட்டம் ரத்து செய்யப்பட்டதால் பட்டியல் இன, பழங்குடி இன மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என, அவர் தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தர 
வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.

ஆனால், இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன் எதுவும் கிடைக்கவில்லை என்ற அவர், இதற்கு முந்தைய அரசுகளும் மத்திய அரசின் சட்டங்களை செயல்படுத்த நினைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது என்றும், பிரதமரின் கல்வி உதவித் தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சி சட்டங்களால் காஷ்மீரில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தனர் என்றார்.


370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அங்கு போர் மேகம் மூளாது என்றும், பயங்கரவாதத்தில் இருந்து காஷ்மீரை விடுவிப்போம் என்றும் மோடி உறுதியளித்தார்.ஜம்மு காஷ்மீரில் தற்போதைய சூழல் மேம்படும்போது, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையினர் படமெடுக்க முன்வர வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.