பொதுமக்களுடன் உணவருந்திய அஜித் தோவல்

காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொது இடத்தில் உணவருந்தினார்.
பொதுமக்களுடன் உணவருந்திய அஜித் தோவல்
x
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறார். காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அஜித் தோவல், பாதுகாப்பு படையினரை சந்தித்து பேசினார். மேலும், அங்கிருந்த உள்ளூர்வாசிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொது இடத்தில் மதிய உணவை உண்டார்.


Next Story

மேலும் செய்திகள்