3- ம் படி நிலைக்கு உயர்த்தப்பட்டது, சந்திராயன் - 2 விண்கலம்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் - 2 விண்கலம், வெற்றிகரமாக மூன்றாம் படி நிலைக்கு உயர்த்தப்பட்டது.
3- ம் படி நிலைக்கு உயர்த்தப்பட்டது, சந்திராயன் - 2 விண்கலம்
x
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் - 2 விண்கலம், வெற்றிகரமாக மூன்றாம் படி நிலைக்கு உயர்த்தப்பட்டது. சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 22 ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் - 2 விண்கலம், நீள் வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. கடந்த புதன்கிழமை சந்திராயன்- 2 விண்கலத்தின் சுற்றுப்பாதையை உயர்த்திய விஞ்ஞானிகள், கடந்த 26 -ம் தேதி, இரண்டாவது முறையாக உயர்த்தினர். இப்போது, 3- வது முறையாக சந்திராயன்- 2 விண்கலத்தின்  உயரத்தை வெற்றிகரமாக உயர்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். திட்டமிட்ட படி, சந்திராயன்- 2விண்கலம், செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் என்று, இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்