ஹோட்டலில் உள்ள பொருட்களை திருடிய இந்தியர்கள் - அறையை காலி செய்து புறப்படும் போது சிக்கினர்

இந்தோனேஷியாவில் ஹோட்டல் அறையில் உள்ள பொருட்களை திருடிய இந்திய குடும்பம் பற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஹோட்டலில் உள்ள பொருட்களை திருடிய இந்தியர்கள் - அறையை காலி செய்து புறப்படும் போது சிக்கினர்
x
இந்தோனேஷியாவில் ஹோட்டல் அறையில் உள்ள பொருட்களை திருடிய இந்திய குடும்பம் பற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாலி தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ள இந்திய குடும்பத்தினர், அறையை காலி செய்துவிட்டு சென்ற போது, ஹோட்டலுக்கு சொந்தமான துண்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள் அலங்கார பொருட்களை மறைத்து வைத்து எடுத்து சென்றனர். இதனை கண்டுபிடித்த ஹோட்டல் ஊழியர்கள், பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது பொருட்களுக்கான பணத்தை தருகிறோம் விடுங்கள் என அவர்கள் கெஞ்சினர். ஆனால், பணம் தேவையில்லை, நம்பிக்கைதான் முக்கியம் என ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்த இந்தியர் ஒருவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்