கேரளாவில் அதிக விலைக்கு விற்கப்படும் தமிழக இறைச்சி கோழிகள் - கேரளாவில் இறைச்சி கோழி உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

கேரள சிக்கன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதால் கேரளாவில் தமிழக கறிக்கோழி விற்பனை பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் அதிக விலைக்கு விற்கப்படும் தமிழக இறைச்சி கோழிகள் - கேரளாவில் இறைச்சி கோழி உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
x
கேரள சிக்கன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதால், கேரளாவில் தமிழக கறிக்கோழி விற்பனை பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இந்த திட்டத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் கோழிப்பண்ணை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மொய்தீன், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி கோழிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் இதற்கு மாற்றாக கேரளாவிலேயே பெருமளவு உற்பத்தியை உருவாக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார். கேரளாவில் இறைச்சி கோழி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருப்பது, தமிழக உற்பத்தியாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்