டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.
x
இன்று காலை  மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி காலமானார்.இவர் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகள் பதவி வகித்தவர்.மேலும் முன்னாள் பிரதமர் , மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார் ஷிலா தீட்சித்.

குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்




இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில் டெல்லியின் முன்னேற்றத்துக்கு கடுமையாக உழைத்துவர் என்றும் அவரது குடும்பத்தாருக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் தெரிவித்துள்ளார்,ஷீலா தீட்சித் மறைவுக்கு டிவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவர் டெல்லியின் முதல்வராக இருந்தபோது, தலைநகரம் நல்ல வளர்ச்சியைப் பெற்றது என்றும் அதற்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார் என கூறியுள்ளார்.இது குறித்து டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்