நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி

முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி
x
கர்நாடக சட்டப்பேரவையில், முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என, மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூரூவில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள தமது கட்சி எம்.எல்.ஏக்களுடன், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடியூரப்பா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 17 முதல் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறினார். கர்நாடக முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கொ​ண்டு வந்தால் அதனை எதிர்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

15 - ந்தேதி சபாநாயகரை சந்திப்பேன் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டி தகவல்



ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களிடம், காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சிகளின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டி, யார் யாரோடு பேசுகிறார் என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார். வருகிற 15 ஆம் தேதி, சபாநாயகர் தம்மை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவரை சந்தித்து விட்டு, கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்