தமிழக மணல் கொண்டு சந்திரயான்-2 சோதனை - மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான்-2 விண்கலத்தின் சோதனைகள் தமிழக மண் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக சந்திராயன்-2 வின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தமிழக மணல் கொண்டு சந்திரயான்-2 சோதனை - மயில்சாமி அண்ணாதுரை
x
சந்திரயான்-2  நிலவில் தரையிறங்குவதற்கு வசதியாக லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சோதனை செய்ய நிலவைப் போன்ற நிலப்பரப்பை கொண்ட சோதனை மையத்தை இஸ்ரோ உருவாக்கியது. இதற்கு நிலவில் உள்ளவாறான மணல்தேவைப்பட்ட நிலையில், முதலில் நிலவில் இருந்து மணல் எடுத்து வந்த அமெரிக்காவை நாடலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள "அனார்த்தோசைட்" பாறைகளில் நிலவில் காணப்படுவது போன்ற படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சேலம் அருகே உள்ள சித்தம்பூண்டி,  குன்னமலை ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மணல் கொண்டு சந்திரயான்-2 வை நிலவில் தரையிறக்குவதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்