உணவுக்குழாயில் புரோட்டோ சிக்கி புது மாப்பிள்ளை இறப்பு

புதுச்சேரியில் உணவுக் குழாயில் புரோட்டோ சிக்கி புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.
உணவுக்குழாயில் புரோட்டோ சிக்கி புது மாப்பிள்ளை இறப்பு
x
புதுச்சேரியில், உணவுக் குழாயில் புரோட்டோ சிக்கி புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.   மனைவியுடன் இரவு நேரத்தில் போனில் பேசியவாறு பரோட்டா சாப்பிட்டதால், இறந்ததாக மருத்துவ பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புருஷோத்தமன் என்பவருக்கு 6 மாதம் முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவி சுந்தரி தாய் வீட்டுக்கு சென்றதால், கடந்த 4ஆம் தேதி இரவு கடையில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிடும் போது போனில் பேசியபடி சாப்பிட்டதால், பரோட்டா தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை இதை உறுதிப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்