சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
x
தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. நரசிங்கி காவல்நிலையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, என்ஜின் பகுதியில் திடீர் என, தீ விபத்து ஏற்பட்டது. என்ஜின் பகுதியில் பற்றிய தீ, வேகமாக பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் அதிலிருந்து குதித்து தப்பினார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்