முடங்கும் மசோதாக்கள்- திணறும் பா.ஜ.க

மக்களவையில் தனிப்பெரும்பான்மையோடு இருக்கும் பா.ஜ.கவுக்கு மாநிலங்களவையில் போதிய பலமில்லை.
முடங்கும் மசோதாக்கள்- திணறும் பா.ஜ.க
x
மக்களவையில் தனிப்பெரும்பான்மையோடு இருக்கும் பா.ஜ.கவுக்கு மாநிலங்களவையில் போதிய பலமில்லை. 

245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் பெற 123 உறுப்பினர்கள் தேவை. 

ஆனால் பா.ஜ.கவிடம் 75 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணி கட்சி ஆதரவும் பா.ஜ.க.வுக்கு உண்டு. 

பெரும்பான்மை இல்லாததால் முக்கிய மசோதாக்கள் முடங்கும் சூழல் நிலவுகிறது. 

குறிப்பாக முத்தலாக் தடை மசோதா, ஆதார் மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு, 

திரைப்படச் சட்டம் உள்பட பல முக்கிய மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் பா.ஜ.க திணறி வருகிறது. 

மசோதாக்கள் சட்டமாக மாற, இரு அவைகளிலும் அவை நிறைவேற்றப்பட வேண்டும்  

எனவே, நாட்டின் நலன் என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவை வசப்படுத்தும் முயற்சியில் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் ஈடுபட்டுள்ளது. 

இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

அதுமட்டுமின்றி எதிர்வரும் காலத்தில் மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் பெற பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. 

அடுத்தாண்டு 72 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில், பெரும்பான்மை பலத்தை பெற்றிட வேண்டும் என பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

எனினும், மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், பீகார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லி ஆகிய 

மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.கவின் வெற்றியை பொறுத்தே,

2020ல் அதன் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

மாநிலங்களவையில் அதிக இடங்களை பெற பா.ஜ.கவின் முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story

மேலும் செய்திகள்