ராகுலின் அரசியல் பயணம்

ராகுல் காந்தி, தேசிய அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2003 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ராகுல் காந்தி உறுதிப்படுத்தவில்லை. தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
ராகுலின் அரசியல் பயணம்
x
* ராகுல் காந்தி, தேசிய அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2003 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ராகுல் காந்தி உறுதிப்படுத்தவில்லை. தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். 

* 2004 ஆம் ஆண்டு, தமது தாயார் சோனியாவின் அமேதி தொகுதிக்கு சென்ற போது ராகுல்காந்தி அரசியலுக்கு வந்து விட்டார் என தகவல்கள் வெளியாகின. 

* அரசியலில் அடியெடுத்து வைப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என அப்போது கூறிய ராகுல், எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறினார்.

* இந்த நிலையில், 2004 ஆம் ஆண்டு,  மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு, அவரது அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

* அந்த தேர்தலில், ராகுல்காந்தி சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

* 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாத  ராகுல்காந்தி, அமேதி மற்றும் உத்தரபிரதேச அரசியலில், மட்டுமே கவனம் செலுத்தினார். 

* அதே 2006 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ராகுல் காந்தி, கட்சியில், முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் என ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கோக்கை விடுத்தனர்.

* ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக் கொள்ளாமல், அனைவரையும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார்.

* கடந்த 2007 ஆம் ஆண்டு, உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். ஆனாலும் அந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, 
8 புள்ளி ஐந்து மூன்று சதவிகித வாக்குகளும் 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 

* இந்நிலையில், 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டார். இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் பதவியையும் ராகுல் ஏற்றார்.


* 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 3 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி.யானார்.

* அதே சமயம், உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழு காரணம் ராகுல் காந்தியே என கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

* அரசியலில் ஈடுபட்ட துவக்கத்தில், மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களில் தங்கி, உணவருந்தி ராகுல் காந்தி பரபரப்பை ஏற்படுத்தினார்

Next Story

மேலும் செய்திகள்