ஜூலை 5-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் : வேளாண்துறைக்கு முன்னுரிமை கிடைக்குமா? - தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு

நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
ஜூலை 5-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் : வேளாண்துறைக்கு முன்னுரிமை கிடைக்குமா? - தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
பாஜக அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது.2018-19 ஆண்டில் 57 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீடு 144 சதவீதம் அதிகரித்திருந்தது.நீண்ட காலமாகவே விவசாய வருமானம் நலிவடைந்து வரும் நிலையில்,  விவசாயத் திட்டங்களை செயல்படுத்த ,மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்கிற கருத்தும் உள்ளது.விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குதல், ஆண்டுக்கு 6 ஆயிரம் விவசாய  நிதி உதவி, குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என பல திட்டங்களை மத்திய அரசு ஏற்கெனவே  அறிவித்துள்ளது.விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரித்தல்,சூரிய சக்தியை வருமான வாய்ப்பாக விவசாயிகள் பயன்படுத்த அனுமதித்தல்,நுண் நீர்ப் பாசனத்தில் முதலீட்டை அதிகரித்தல், வேளாண் பல்கலைக்கழகங்களில் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட யோசனைகளை விவசாய பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.இந்த நிலையில், நாடு முழுவதும் நிலவும் வறட்சியை போக்க நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி என பல எதிர்பார்ப்புகளும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும், உரம் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு மானியம், பயிர் காப்பீடு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் தமிழக விவசாயிகள் முன்வைக்கின்றனர்.விவசாய திட்டங்களுடன், காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பதும் தமிழக விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்