காலி ஆசிரியர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் - புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனைத்து பாட புத்தகம் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
x
புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனைத்து பாட புத்தகம் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சுப்ரமணிய அரசு பள்ளியில், அம்மாநில  கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது  மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுக்கும் விதம், கற்றல் திறன் ஆகியவை குறித்து  மாணவர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், படிப்பில் தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 2-மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என்றும்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனைத்து பாட புத்தகங்களும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்