குந்தக்கல் தர்காவில் பிச்சை எடுத்து வந்த முதியவர் உயிரிழப்பு

குந்தக்கல் தர்காவின் வெளியே பிச்சை எடுத்து வந்த மதனபள்ளியை சேர்ந்த பஷீர் சாப் என்ற முதியவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
குந்தக்கல் தர்காவில் பிச்சை எடுத்து வந்த முதியவர் உயிரிழப்பு
x
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குந்தக்கல் தர்காவின் வெளியே பிச்சை எடுத்து வந்த,  மதனபள்ளியை சேர்ந்த, பஷீர் சாப் என்ற முதியவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த முதியவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில், 3 லட்சத்து 22 ஆயிரத்து 670 ரூபாய் பணம் இருந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பாதுகாப்பாக வைத்துள்ள போலீசார், பஷீர் சாப் உறவினர்கள்  குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்