ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி...

பிரதமர் மோடி இன்று காலையில் ஜப்பான் சென்றடைந்தார்.
ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி...
x
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 'ஜி-20' மாநாடு, நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, ஜப்பான், ரஷியா, சவுதி அரேபியா, அமெரிக்கா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் ஜப்பானின் ஒசாகா நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். இந்திய நேரப்படி, இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒசாகா நகருக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை தொடங்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் அவர், ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார்.  

Next Story

மேலும் செய்திகள்