"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்

கர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.
கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்
x
கர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் மாதம் பூஜ்யம் புள்ளி ஒரு டி.எம்.சி நீர் கிடைக்க வேண்டும் என்றும், ஆனால், கர்நாடகம் நீர் திறக்காததால் தங்கள் மாநில விவசாயிகளும், பாதிப்படைந்துள்ளதாக கூறினார். மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க கர்நாடகம் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால், அது விவாதிக்கப்படவில்லை என்றும் கூறினார். புதுச்சேரிக்கு தமிழகம் கொடுக்க வேண்டிய மொத்தம் ஏழு டி.எம்.சி நீரை, ஜூன் முதல் ஜனவரி வரை பகிர்ந்தளிக்க தமிழக அரசு உரிய அரசாணை வெளியிடவும்  வலியுறுத்தியதாகவும், புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்