குஜராத்தில் பிற்பகல் கரை கடக்கிறது வாயு புயல்...

குஜராத்தில் இன்று பிற்பகல் வாயு புயல் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குஜராத்தில் பிற்பகல் கரை கடக்கிறது வாயு புயல்...
x
அரபிக்கடலில் உருவான 'வாயு' புயல் நேற்று அதிதீவிர புயலாக மாறியது. இந்நிலையில் குஜராத் மாநிலம்  போர்பந்தர் மற்றும்  மகுவா  (Mahuva) இடையே இன்று பிற்பகலில் வாயு புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, 130 முதல்  175 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது. 
இதனையடுத்து முன்னெச்சரிககை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுபோல, தேசிய பேரிடர் மேலான்மை படையின் 52 குழுக்கள் மற்றும் கடலோர காவல் படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.  புயலின் தாக்கம் சுமார் 10 மாவட்டங்களில் இருக்கும் என்பதால், பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடைய போர்பந்தரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சோம்நாத் கோயிலின் முன்பக்க மேற்கூரை காற்றில் சேதமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றில் இருந்தே தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்