நாடு முழுவதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் : புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை

புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் : புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை
x
புதிய கல்விக் கொள்கையில், பிறப்பு முதல் ஆறு வயது வரையிலான பருவத்தை  கவனப்படுத்தி, ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை  பள்ளிக் கல்விக்கான ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.6 வயது வரை குழந்தைகளின் கற்றல் மிக வேகமாக இருக்கும் என்பதால், போதுமான வசதிகளும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் கொண்ட அங்கன்வாடிகள் மையங்கள் உருவாக்க வேண்டும்.அங்கன்வாடிகள், முதல் நிலை பள்ளிகளுடன் இணைக்கப்படுவதுடன், அவை ஆரம்பப் பள்ளிகளுக்குள் இயங்க வேண்டும். அல்லது தனியாக இயங்கும் முதல் நிலை பள்ளிகளுடன் இணைக்கப்பட வேண்டும்.புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான பாடத்திட்டத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவற்றில் பணி அமர்த்தப்பட வேண்டும்.ஆசிரியர்கள் கலாச்சார பாரம்பரியங்கள், நாட்டுப்புற கலைகளை, கவிதைகள், கதைகள், பாடல்கள், சமூகத்துடன் அடையாள உணர்வு, உற்சாக உணர்வு ஆகியவற்றை கற்பிப்பார்கள்,முதல் நிலை பள்ளிகள் முதல் ஆரம்பப் பள்ளிகள் வரையிலான கல்வி திட்டத்தை மனித வள மேம்பாட்டுத் துறை செயல்படுத்தும்.அடிப்படை கல்வியில் ,  நாடு தழுவிய அளவிலான பார்வை உருவாக்கப்படும்.ஆரம்ப நிலை குழந்தை பருவ கல்வியை, கல்வி பெறும் உரிமை சட்டத்தில் சேர்க்க வேண்டும்,இ.சி.சி.இ திட்டத்தின் தரத்தை உறுதி செய்ய ஒழுங்குமுறை  அமைப்பு உருவாக்கப்படும்,ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் முதல் நிலை பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் தரம் உறுதி செய்யப்படும்.புதிய கல்விக் கொள்கையின்படி இரண்டு கட்ட பாடத்திட்டத்தை உருவாக்கும் பணி என்.சி.இ.ஆர்.டி அமைப்பிற்கு அளிக்கப்படும்.பிறந்த குழந்தை முதல் 3 வயதுடைய குழந்தைகள் முதல் பகுதியாக பிரிக்கப்பட்டு அவர்களது பாடத்திட்டம். பெற்றோர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் குழந்தைகளின் புரிதல் திறனை மேம்படுத்த உதவுவார்கள்.3 முதல் 8 வயதுடைய குழந்தைகளை இரண்டாம் பகுதியாக பிரித்து, அவர்களுக்கான கல்வி அங்கன்வாடிகள், முதல் நிலை பள்ளிகள், பெற்றோர்கள், ஆரம்பப் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கானதாக உருவாக்கப்படும்.பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடனும், மத்திய சுகாதார அமைச்சகத்துடனும் ஆலோசனை செய்த பின்னர் 2019ஆம் ஆண்டின் இறுதியில் திட்டம் இறுதி செய்யப்படும்.

Next Story

மேலும் செய்திகள்